ராமு தனராஜா

பதுளை மாவட்டம் மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் மடுல்சீம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எக்கிரிய பகுதியில் உள்ள வயல் ஒன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த மலைப்பாம்பு அப்பகுதி மக்களால் உயிரோடு பிடிக்கப்பட்டு எக்கிரிய காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.

ராமு தனராஜா