வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்துக்கு வரி அறவிடப்படுவதாகவும், கட்டாயமாக அது இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுவதாகவும் வெளியான தகவல்களை இலங்கை மத்திய வங்கி முற்றாக மறுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களுக்கு அனுப்பப்படுகின்ற பணத்துக்கு மேலதிக வரி எதுவும் அறவிடப்படுவதில்லை. மேலும் அந்த பணத்தை வங்கியில் வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைத்திருக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தேவையான சந்தர்ப்பத்தில் இதனை ரூபாவுக்கு மாற்றிக் கொள்வதற்கான இயலுமை பணம் அனுப்புபவருக்கு உண்டு என்றும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

You missed