இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்கு விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட பால்மா அடங்கிய 6 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் சபையில் நடந்து கொண்டிருக்கிறது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பால்மாவை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் இறக்குமதியாளர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக உரிய அறிக்கையில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், இந்த பிரச்சினை காரணமாக நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.