அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பணிக்கு வர அவசியம் இல்லை என ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சுற்று நிருபத்தை உடனடியாக வாபஸ் பெறுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில் இனி அனைத்து அரசு அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் முழுமையாக இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்துவாறு வீட்டுத்தோட்டங்களை செய்து எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் உணவு பஞ்சத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.