( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளன.

அதேவேளை, 19 ஆம் தேதி பத்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், 21 ஆம் தேதி சப்பரத் திருவிழாவும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, சங்காபிஷேகம்  எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை அதேநாளில்  தீர்த்தோற்சவம் நடைபெற இருப்பதாக ஆலய பரிபாலன சபையின்  ஆலோசகர் எஸ். இலங்கநாதன்( ஓய்வுபெற்ற கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்) தெரிவித்தார்