அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சிறுவர்கள் காரை அதிவேகமாக செலுத்திய நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சிறுவர்கள் எவ்வாறு காரை எடுத்துச் சென்றார்கள் என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், உண்மையான சந்தேகநபர்களை பாதுகாக்கும் நோக்கில் சுமார் 35 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அக்கரைப்பற்று பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

