இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயங்களின் ஆவணங்களின் ஒழுங்கு படுத்தும் நோக்குடன் திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஆலய ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் பாதுகாத்தல் தொடர்பான விடயங்களை மாவட்ட செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி கருத்தறை வழங்கினர் இதல்பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு எஸ். தேவமுரளி மற்றும் கலாசார உஅதியோகத்தர் திரு எஸ் மதிசிலன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்
இதில் ஆராயப்பட்ட விடயங்களாக
01ஆலயத்தின் அடிப்படை தகவல்கள்,
( ஆலயத்தின் பெயர், சிறப்புப்பெயர்கள், பதிவிலக்கம், முகவரி, ஆலயம் அமைந்துள்ள கிராமசேவகர் பிரிவு, பிரதேச செயலகப்பிரிவு, ஆலயத்தின் தொலைபேசி, மின்னஞ்சல், இணைய முகவரி)
02.ஆலயத்தின் வரலாற்றுத்தகவல்,
(ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம், அல்லது ஆண்டு, ஆலய புராண, இதிகாச, ஜதிக, கரணபரம்பரை கதைகள், வரலாற்றுத்தகவல்கள், வரலாற்றுக்குறிய ஆதாரங்கள், கல்வெட்டு, புராணங்கள், நூல்கள்,)
- ஆலய மூர்த்தம் தொடர்பான விபரங்கள்.
(மூலமுர்த்தியின் விசேட பெயர்கள், பரிபாரமூர்த்திகள் தொடர்பாற விபரங்கள், குலவழிபாடு, பாரம்பரிய வழிபாடு)
- ஆலயத்தின்
உட்கட்டமைப்பு தொடர்பான விபரங்கள்.
( ஆலயம் அமைந்துள்ள காணியின் விஸ்திரணம், கட்டிடங்கள், கோபுரங்கள், விமானம், தீர்த்தகோணி, கிணறு, குலம், தேர், மஞ்சனம், சப்பிரம், வாகணங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், ஆலயத்தின் தலக்கோலம், கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கொடித்தம்பம், கோபுரம், யாகசாலை, கலஞ்சியம், வாகணசாலை, ஆலயத்தின் தன்மை, சீமேந்து, கருங்கள், ஏனையவை, ஆலயத்தின் வகை, பெரியது, சிறியது, ஒரளவானது, ஆலயத்தின் விருட்சம்)
05, ஆலய வழிபாடு தொடர்பான விபரங்கள்
(ஆகமம் சார்ந்த வழிபட்டு முறை, ஆகமம் சாராத வழிபாட்டு முறை, நித்திய வழிபாடு, நைமித்திய பூசை தொடர்பான விபரம், விசேட விழாக்கள், பூசை வழிபாடு, வருடாந்த உற்சவங்கள் தடர்பானவிபரங்கள்)
- ஆலயத்தின் நிர்வாகம் தொடர்பான விபரங்கள்
(ஆலயத்தின் யாப்புத்தொடர்பான விபரம், ஆலயம் பொது, தனியாற ஆலயம், ஆலயகடந்தகால நிர்வாக விபரங்கள், ஆலய காண வபரங்கள், ஆலய நிதி நிர்வாக நடைமுறைகள், பொது/தனியார்/ நம்பிக்கைச்சபை/ பரம்பரை நிர்வாகசபை விபரங்கள்) - ஆலயத்தின் குருமார் தொடர்பான விபரங்கள்
ஆலயத்தின் குருமர் பிண்ணனி, வரலறு, பரம்பரை, பிரதமகுரு உதவிக்குருமார் விபரங்கள், பூசகர் விபரம், கபபகணார விபரம்) - ஆலயத்தின் துணை நிறுவனங்களின் விபரங்கள், ( அறநெறிப்பாடசாலை, திருப்பணிச்சபை, அன்னதானசபை, இளைஞர் மன்றங்கள்)
- ஆலயத்தின் நிதி தொடர்பான விபரங்கள்
( ஆலய வங்கிக்கணக்கின் விபரம், இறுதி ஆண்டறிக்கை, விசேட நிதி நடமுறைகள் தொடர்பான விபரங்கள், திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி தொடர்பான விபரம், எனைய திணைக்களம், நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி விபரங்கள்) - ஆலயத்தின் பிணக்குகள் தொடர்பான விபரங்கள்
( நிதி, நிர்வாகம், குடி, வம்சம், சந்தானம், பரம்பறை, பூசைமுறை)
- ஆலயத்தினால் முன்னேடுக்கப்படும் சேவைகள் தொடர்பான விபரங்கள் ( சமயப்பணி, கல்விப்பணி, சமூகப்பணி, கலைப்பணி) மேற்படி விடயங்கள் ஆரயப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஆலயங்கள் தங்களது ஆவணங்களை பாதுகாப்பதற்கான நடமுறைகளை மேற்கொள்ள வேண்டும் ன கூறபபட்டதுடன் ஆலய பொதுக்கூட்டம் மறறும் விசேட கூட்டங்களுக்கு பிரதேச, மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர்களை அழைப்பு விடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலய தர்மகர்ததாக்கள், நிர்வகசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.















