பாறுக் ஷிஹான்

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு  நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்  இன்று  நடைபெற்றது.

இவ்விசேட சபைக் கூட்டமானது  05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்கவின்    நிந்தவூர் வருகையை முன்னிட்டு  அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிபாரிசில் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும், குறித்த கலாச்சார மண்டப கட்டிடத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க நிந்தவூருக்கு வருகை தரவுள்ள அதிமேதகு ஜனாதிபதி அவர்களை சபை உறுப்பினர்கள் பாராட்டி உரையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.