துறைநீலாவணையில் சித்திரைக் குதூகலம்.

செல்லையா பேரின்பராசா.

துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சித்திரைக் குதூகலம்  15.04.2026 வியாழக் கிழமை துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யுனைட்டெட் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக் கழக உறுப்பினர் மயில்வாகனம் ஜேனுஷன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் பிரதம அதிதியாகவும்,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் – வினோராஜ் கௌரவ அதிதியாகவும் , துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான மு.இராஜகோபால்,  துறைநீலாவணை மகாவித்தியாலய பிரதி அதிபர் இ.லிங்கநாதன்,  ஆசிரியர் தி.கோகுலராஜ்,  துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலய உதவி பூசகரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான த.சசிகரன்,  சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுநிலை அதிபருமான செல்லையா பேரின்பராசா,  கூட்டுறவு பரிசோதகர் இ.பவப்பிரகாஸ் ஆகியோர் அழைப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் 

மேகசுந்தரம் வினோராஜ் ஆகியோர் விழா ஏற்பாட்டாளர்களால் கவி வாழ்த்துமடல் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.