சமூக சேவகர் விசு கணபதிப்பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் அனுசரணையில் பொத்துவில் கோமாரி கழுகொல்ல கிராமத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு கிராம மக்கள் ஒன்றிணைந்து. விளையாட்டின் ஊடாக சிறுவர்களை மகிழ்விப்போம் என்னும் கரு பொருளில் விளையாட்டு நிகழ்வு நேற்று 11.04.2026 நடைபெற்றது

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மீது அதிக நாட்டம் கொள்வதால் இன்றைய சிறுவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. அவற்றிலிருந்து சிறுவர்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கோடு சிறுவர்களை மகிழ்விக்க கூடிய பல்வேறு கிராமிய விளையாட்டு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி இருந்தனர்.

இந்நிகழ்வில் சிறுவர்கள் மட்டுமல்ல கிராமத்து மக்களும் கலந்து கொண்டு தாங்களும் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டது மிகவும். சிறப்பானதாக அமைந்தது. இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நடத்த வேண்டியதன் அவசியம் அங்கு உணரப்பட்டது. கல்முனை . ஆரம்பக் கல்வி பிரிவு ஆசிரியர் ஆலோசகர் சாந்தகுமார் அவர்களும். ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண வரதராஜன். உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன் மற்றும் பொத்திவில் பிரதேச சபை உறுப்பினர். திரு ரீ. சுபோசன். சமூர்த்தி அ விருத்தி உத்தியோகத்தர் திருமதி. சிலோஜினி பிரபாகரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து. சிறப்பித்தனர். நிகழ்வுகள் யாவும் கோமாரி கழுகொல்ல கிராமத்தின்மாதர் கிராம விருத்தி சங்கத் தலைவி நந்தினி தலைமையில் நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.