மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்கள் மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்பு 

(  வி.ரி.சகாதேவராஜா)

2025/26 ஆம் கல்வி ஆண்டில் க. பொ. த உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்களுக்கு மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்புள்ளது.

அவர்களில் முதல் தடவை தோற்றியோர்- 34 பேர்(53.96%) அத்துடன் 

2ஆம் தடவை தோற்றியோர்- 18 பேர் (28.57%) அதேவேளை 

3 ஆம் தடவை தோற்றியோர்- 11பேர் (17.46%) ஆக மொத்தம் 63 மாணவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

3 ஆவது தடவை, தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றி 11 பேர் மருத்துவ பீட அனுமதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  Island Rank 835  க்குள் பெற்ற 26 மாணவர்களுக்கே இம்முறை திறமை அடிப்படையில் மருத்துவ பீட அனுமதி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது