கிறிஸ்து உயிர்ப்பின் திருநாளை முன்னிட்டு உயிர்ப்பு விழா கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் முன்றலில் நேற்று நடைபெற்றது.
அருட்திரு ரவி முருகுப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் முன்னாள் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு எபநேசர் ஜோசப் அவர்கள் பிரதம அதிதியாகவும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.கலையரசன் சிறப்பு அதிதியாகவும் பாடசாலையின் பிரதி அதிபர்கள் திரு.பா.சஜிந்ரன் திரு.வி.இராஜேந்திரன் …திருமதி.ஏ.ஆர்.என். மன்பூஸா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மண்டூர் மெதடிஸ்த திருச்சபையின் போதகர் திரு.டீ.அருள்ராஜா மற்றும் அருட்செல்வி ஏ.சுலோஜினி ,ஊழியர்களான ரீ.அதிஸ்டவதி, வி.இளங்கோவன் ,பாஸ்டர் ரமேஸ் மற்றும் சபை மக்களும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உயிர்ப்பு தொடர்பான பாடல்கள் நடனங்கள் நாடகங்கள் இடம்பெற்றன.
விசேடமாக இப்பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்புப் பொதிகள் விருந்தினர் களால் வழங்கப்பட்டன.







