காரைதீவு – இந்து சமய அறநெறி ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு 

( வி.ரி.சகாதேவராஜா)

 காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு   காரைதீவு  பிரதேசசெயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

 இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனனின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பினை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி மேற்கொண்டதுடன்  ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி  சிவராஜா சிவலோஜினி மேற்கொண்டார்.

இந்நிகழ்வில்

காரைதீவு பிரதேச செயலக உதவிச்செயலாளர்  பி. பிரணவரூபன் மற்றும், கணக்காளர் பாத்திமா றிம்சியா,  நிர்வாக உத்தியோகத்தர் திரு து.கமலநாதன், கலாசார உத்தியோகத்தர்கள், பிரிவுகளுக்கான கிளைத்தலைவர்கள் மற்றும் அறநெறிபாடசாலைகளின் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.