கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 2000ஆம் ஆண்டு கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒரு குழுவாக இயங்கும் Y2k family எனும் அமைப்பின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் A. J அதிசயராஜ் மூலமாக ஜனாதிபதியின் நிவாரண நிதியத்தின் கணக்கிலக்கத்திற்கு 23/12/2025ம் திகதி 250000/= ரூபாவினை வைப்புச்செய்துள்ளனர்.

குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக ஜனாதிபதியின் நிவாரண நிதியம் அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்க  ஜனாதிபதியின் நிவாரண நிதிய  கணக்கிலக்கத்திற்கு இன்று(23)  ரூபா இரண்டு  இலட்சத்தி ஐம்பதாயிரம்    ரூபாவினை  குறித்த அமைப்பு மக்கள் வங்கி கிளையில் வைப்புச் செய்துள்ளனர்.

அத்துடன் அதற்கான பற்றுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை  கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் ஏ.ஜே. அதிசயராஜிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்துள்ளனர்.