அன்னமலை ரெட்ணம் சுவாகருக்கு சாகித்திய விருது
கே.எஸ்.கிலசன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தின் அன்னமலை கிராமத்தை சேர்ந்த ரெட்ணம் சுவாகர் அவர்களது “இரகசியங்களால் ஆன ஒற்றை வரிக்கோடு” கவிதை நூலுக்கு சாகித்திய விருது கிடைத்தது.
இவர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது திருக்கோயில் கௌரவிக்கும்பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச்சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர் அரச உத்தியோகத்தர்களுக்கான கவிதை போட்டியிலும் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞரும் உதவி பிரதேச செயலாளருமான ரெட்ணம் சுவாகர் அவர்களுக்கு கல்முனை நெற் ஊடகத்தின் வாழ்த்துகள்.



