இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு 

( வி.ரி.சகாதேவராஜா)

வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையமொன்று இன்று (5) வெள்ளிக்கிழமை அணையா விளக்கு ஏற்றப்பட்டு கல்முனை பாண்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

 கல்முனை பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கானஓர் இடமாக இது அமைந்துள்ளது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வெளிபாட்டுக்கு அமைய வல்லவர் தவத்திரு புண்ணியமலர் அம்மாவின் வழிகாட்டுதலில் இந்நிலையம் இனிமேல் செயற்படும்.

அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜீ   ஓய்வு நிலை உதவிக்கல்வி பணிப்பாளர் விபுலமாமணி வீ.ரி. சகாதேவராஜா, மட்டக்களப்பு ஆதீன நிறுவுனர் மு.ஜெயபாலன், ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் கண வரதராஜன், சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன சுவாமி கலியுகவரதன். ஆன்மீக ஜோதிடர் சிசுபாலன் போன்ற அதிதிகளுடன் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு ஆன்மீக அதிதிகளும் ஆன்மீக ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு அணையா தீபம்,அணையா அடுப்பு போன்றவையும் ஏற்றப்பட்டன.இவை தொடர்ந்து இயங்கும்.

விழா ஏற்பாடுகளை செய்த ஆன்மீக செயற்பாட்டாளர் சௌவியதாசன் நன்றியுரையாற்றினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.