SCSDO இன் துறைசார் மூத்த, இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கும் விழா இன்று வவுனியாவில்!

அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் (SCSDO) இன் துறைசார் மூத்த இளைய ஆளுமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு 31.08.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 மணிக்கு வவுனியாவில் நடைபெறவுள்ளது.
வவுனியா மாநகரசபை மண்டபத்தில் திருக்கேதீஸ்வரன் குருசாமி (நிறுவுனர் தலைமை ஒருங்கிணைப்பாளர் SCSDO அவர்களின் தலைமையில் நடை பெறவுள்ள இந் நிகழ்வில் முக்கிய பல அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.