சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு!

( வி.ரி.சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் வட்டாரத்தில் தெரிவான 12 பேரில் இருவர் தமிழர்கள் ஆவர்.

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெள்ளி ஜெயச்சந்திரன் அன்னாசி சின்னத்தில் சுயேட்சை அணியாக போட்டியிட்டு மொத்தம் 

805 வாக்குகளைப் பெற்று வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அவர் வளத்தாப்பிட்டி வட்டாரத்தில் 516 வாக்குகளை பெற்றிருந்தார்.

மல்வத்தை வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எஸ்.டனோஜன் தெரிவு செய்யப்பட்டார்.

மொத்தத்தில் இவர்கள் இருவருமே தமிழர்கள் ஆவர்.

சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 09 ஆசனங்களைப் பெற்றது. முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தி சுயேட்சை ( அன்னாசி) ஆகிய அணிகள் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

மொத்தத்தில் எந்த ஒரு வட்டாரத்தினையும் தமிழரசுக் கட்சி கைப்பற்ற வில்லை. எனினும் 

போனஸ் பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்தது.