இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் CT scan பரிசோதனையில் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாகவும்  வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

You missed