பாறுக் ஷிஹான்

 பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டத்தரணி) வருண ஜயசுந்தர  பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய  மகேஷ் சேனரத்ன,வெற்றிடமாகியுள்ள  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சேவைத் தேவை கருதி இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) முன்னாள் கட்டளை அதிகாரியாகவும், பின்னர் கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிய அவர், இனிவரும் காலத்தில் பொலிஸ் தலைமையகத்திலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பொறுப்பதிகாரியாகச் செயலாற்றுவார்.

 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்ன ஊவா மாகாணத்திலிருந்து இடமாற்றம் பெற்று, கிழக்கு மாகாணத்திற்கான ஒட்டுமொத்தப் பொலிஸ் பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.இவ்விடமாற்றங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் பொலிஸ் தலைமையகத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.