செல்லையா பேரின்பராசா
17.07.2026 இன்று வெள்ளிக்கிழமை இக்கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் அதிதியாகக் கலந்து கொண்டு ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வுகளை இரண்டாம் வருட விசேட கல்விநெறி ஆசிரிய மாணவன் தங்கராசா தர்சன் முன்னிலைப்படுத்தினார்.
ஆசிரிய மாணவர்களால் கிராமிய நடனமான கோலாட்டம் ஆற்றுகைப்படுத்தப்பட்டது.
இதனை சித்திரபாட விரிவுரையாளர் திருமதி சிவதர்சினி ஜெயராம் வழிப்படுத்தியிருந்தார். இந்நிகழ்வில் ஆசிரிய மாணவர்களான கௌசிகா நிரோஜயன்
தனுசாஜினி கவிராஜ்
(ஆங்கிலநெறி)
ஜெயராணி தினேஸ்
(ஆரம்பக் கல்வி)
செல்வகுமாரி தியாகராஜா
(விசேட கல்வி) ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
ஆடி என்னும் இயற்கை பற்றிய காணொளியினை ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜனால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
சோமசுந்தரப் புலவரால் இயற்றப்பட்ட ஆடிப்பிறப்பு பாடல் ஆசிரிய மாணவர்களால் இசைக்கப்பட்டது.
அதிதி அறிமுக உரையினை தமிழ்ப்பாடநெறி விரிவுரையாளர் கு. பாலசண்முகன் ஆற்றினார்.
கலாசாலையின் அதிபர் நிறைவுரை ஆற்றினார். அவர் தனது நிறைவுரையின் போது ஆடிக் கூழ் தயாரிப்பில் பிரதானமாக ஈடுபட்ட விரிவுரையாளர்களான சர்மிளா மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கும் ஆசிரிய மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.
ஆடிப்பிறப்பு கூழ் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.












