மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு பட்டிருப்பில் அமைந்துள்ள உதவி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரதி விவசாய பணிப்பாளரும்,
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான திரு.எம்.பரமேஸ்வரன் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி சுகன்யா பிரகீத் அவர்களது ஒழுங்குபடுத்தலுடன் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களது பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் திருமதி காயத்திரி வேணுதாசன், களுவாஞ்சிகுடி இரத்த வங்கி வைத்தியர்
MIF. சீமா அவர்களும் தாதியர் குழுவினரும் குருதி நன்கொடையாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது 48 பேர் இரத்த தானம் வழங்கியிருந்தனர்.

வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை மாவட்டத்திற்கு பொதுவாக நடைபெறும் இரத்ததான நிகழ்வை பொதுமக்கள் நலன்கருதி இனிவருங்காலங்களில் வருடத்தில் 2 தடவைகள் குருதி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யவிருப்பதாகவும் நலன்புரிச்சங்கத்தின் தலைவரும் பிரதி விவசாய பணிப்பாளருமான திரு. எம். பரமேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.