செல்லையா பேரின்பராசா 

இலங்கை மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை எந்தவிதமான பக்க விளைவுகளும்  இன்றி இயற்கை வைத்தியத்தின் மூலமாக ஓரிரு நாட்களில் விரைவாக குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் உண்டு.

இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் காரைதீவைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியரும்,  ஓய்வு பெற்ற பிரபல விஞ்ஞான பாட ஆசிரியருமான சுந்தரம் தில்லையம்பலம்.

அண்மைய நாட்களில் இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காச்சலுக்கு இலக்காகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையிலும்,  பலர் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகியுள்ளதையும் அவதானித்த பாரம்பரிய வைத்தியரான சுந்தரம் தில்லையம்பலம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இவ்வாறு கூறுகின்றார்.

மனிதனுடைய தவறான செயற்பாடுகளால் சூழல் அசுத்தமடைந்து டெங்கு நுளம்புகள் உருவாகின்றமை கண்கூடு. இவ்வுலகில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகளினால் கண்டறியப்பட்ட பாரம்பரிய வைத்திய முறையில் சகலவிதமான மருந்துகளும் உண்டு.

இவற்றுள் பெருமருந்து இலை என்றழைக்கப்படும் ஈஸ்வர மூலிகையை ( தலைச்சுருளி) இதன் தாவரவியல் பெயரை ஆங்கிலத்தில் Aristolochia Indica L Aristolochiaceae என்றழைப்பர்.

இந்த இயற்கை மூலிகை பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரத்தில் அதிகமாக காணப்படும். இதனை நான் எனது மூலிகைத் தோட்டத்தில் வளர்த்துள்ளேன். தேவையானவர்கள் என்னை நாடினால் முற்றிலும் இலவசமாக சிகிச்சையளிக்க தயாராகவுள்ளேன்.

இந்த இயற்கை மூலிகையான ஈஸ்வர மூலிகை மூலமாக டெங்கு காய்ச்சல்,  சிக்கின் கூனியா, கொரோனா போன்ற நோய்களை இலகுவாக குணப்படுத்த முடியும்.

டெங்கு காய்ச்சலுக்கு இலக்கான ஒருவருக்கு ஈஸ்வர மூலிகை இலைகள் பத்தை (10) எடுத்து நீரினால் கழுவி சுத்ததம் செய்து அதனை சிறு துண்டுகளாக வெட்டி  400 மில்லி தண்ணீரில் சிறிதளவு உப்பு இரண்டு அல்லது மூன்று செத்தல் மிளகாயை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு நன்கு கொதிக்க வைக்கும் நீர் 75 மில்லியானதும் அதனை எடுத்து இளஞ் சூட்டில் மாலை வேளையில் இரண்டு நாட்கள்பருகினால் டெங்கு காய்ச்சலில் இருந்து மனித உயிரை காப்பாற்ற முடியும். இதுவே பாரம்பரிய வைத்திய முறையின் சித்த இரகசியம் என்று கூறியதுடன் தன்னிடம் லர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்றும், இந்த சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.