( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிழாவை நடாத்தினார்கள்.

ஆலய பரிபாலன சபை தலைவர் கே.கனகராசா மற்றும் சபையினர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை, 19 ஆம் தேதி பக்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், 21 ஆம் தேதி சப்பரத் திருவிழாவும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, சங்காபிஷேகம் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை அதேநாளில் தீர்த்தோற்சவம் நடைபெற இருப்பதாக ஆலய பரிபாலன சபையின் ஆலோசகர் எஸ். இலங்கநாதன்( ஓய்வுபெற்ற கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்)
தெரிவித்தார்