விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற 50ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கான அம்பாறை மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டி கடந்த 06.06.2026 அன்று அம்பாறை உள்ளக விளையாட்டு அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற JKMO கராத்தே சங்கத்தின் வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

வெற்றிப் பதக்க விபரம்

🥇 2 தங்கப் பதக்கங்கள்
🥈 3 வெள்ளிப் பதக்கங்கள்
🥉 6 வெண்கலப் பதக்கங்கள்

இதன் மூலம் மொத்தமாக 11 பதக்கங்களை வென்று, சங்கத்திற்கும் கல்முனை மண்ணிற்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்வீரர்களை திறமையான கராத்தே வீரர்களாக உருவாக்கி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்த பிரதம போதனாசிரியர் Shihan Eng S. Murugendiren அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களான Coach S. Baluraj (Carmel Fatima College N.S) மற்றும் Coach S. Shobanraj (Wesley High School) ஆகியோருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன.

அதேபோன்று போட்டியில் பங்கேற்று வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

JKMO கராத்தே சங்கத்தின் விசேட நன்றிகள்

எந்நேரமும் ஊக்கமும் ஆதரவும் வழங்கி வரும்,

🔹 கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. அதிசயராஜ் அவர்களுக்கு,
🔹 விளையாட்டு உத்தியோகத்தர் திரு. சுலக்சன் அவர்களுக்கு,

JKMO கராத்தே சங்கம் தனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இளம் தலைமுறையின் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்தப் பயணம் தொடரட்டும். கல்முனை மண்ணின் பெருமையை உயர்த்திய எமது சிங்கக் குட்டிகளுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

“வெற்றிப் பயணம் தொடரட்டும்; இன்னும் பல தேசிய, சர்வதேச சாதனைகள் உங்களைத் தேடி வரட்டும்!” என கல்முனை நெற் வாழ்த்துகிறது