கிழக்கு இலங்கைச் சிறுவர் அபிவிருத்திச் சங்கத்தின் (ChiDAES-Canada) 21ஆவது ஆண்டு நிறைவு விழாவும், 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இவ்விழா வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, கனடா நோர்த் யார்க்கில் (North York) அமைந்துள்ள ‘சர்ச் ஒப் செயின்ட் ஸ்டீபன்’ (Church of St. Stephen – 2259 Jane Street, North York, ON M3M 1A6) மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”
அனைவரும் வருக” என்ற அழைப்புடன் நடத்தப்படும் இந்த நிகழ்விற்கு, வழமைபோலவே அனுமதி முற்றிலும் இலவசம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விழாவில் நடனம், பேச்சு, பாடல், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன், இரவுப் போசன விருந்தும் (Dinner) உள்ளடக்கப்பட்டுள்ளது.மேலதிக விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது www.chidaes.com என்ற இணையத்தளம் மற்றும் அவர்களின் முகநூல் பக்கம் ஊடாகவோ தொடர்புகொள்ள முடியும் என அமைப்பின் தலைவர் நோ. விஜயரெட்ணம் தெரிவித்தார்
