ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸ், எண் 38 இல் உள்ள அவரது இல்லத்தில் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வுட்லர் கூறியுள்ளார்.

ஏர்பஸ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக கபில சந்திரசேன பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டின் பேரில் அவரை மீண்டும் கைது செய்யுமாறு நீதிமன்றம் நேற்று (7) உத்தரவிட்டிருந்தது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஏர்பஸ் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து, முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 60 மில்லியன் ரூபாய் இலஞ்சமாக
வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.