“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
என்ற வாக்கின் பிரகாரம்
பதுளை மாவட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் அதிபர் கே. எம்.சி. பிரபாகரன் நன்றியுபகாரமாக பாராட்டி புகழாரம் வழங்கியுள்ளார்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பசறை தமிழ் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை 13 இலட்சங்கள் பெறுமதிமிக்க பொருட்களை கொண்டும், சேவையாளர்களின் மனமுவந்த தொண்டை ஆளணி வளமாக கொண்டும்
கல்முனை ஆதார வைத்தியசாலையின் சேவையாளர்களின் நிதி பங்களிப்புடன் திருத்திக் கொடுக்கப்பட்டதை அடுத்து இப் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களுக்கும், மற்றும் பங்கு கொண்ட குழுவினருடன் நிதியினை வழங்கிய சேவையாளர்களையும் பாராட்டும் முகமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விபரம் அறிய காணொலியை பாருங்கள். https://www.facebook.com/reel/1637246934160637
