கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுகாதார தின நிகழ்வுகள்
செல்லையா பேரின்பராசா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதாரத்தை சிறப்பிக்கும் வகையில் (08.04.2026 புதன்கிழமை) நிகழ்வுகள் இடம்பெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் நற்குணராஜா நிருபன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வுகளை இரண்டாம் வருட ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜன் முன்னிலைப்படுத்தினார்
உலக சுகாதார தினம் 2026 அனைவருக்கும் ஆரோக்கியம் அறிவியல் மற்றும் கூட்டு உழைப்பு பற்றிய நவீன உலகில் நல வாழ்வு என்னும் பொருளில் அமைந்த காணொளி – ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜனால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
அன்றாட வாழ்வில் சுகாதாரம் பற்றிய விசேட உரையினை ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி தனுஷாயினி கவிராஜ் ஆற்றினார்.
அதிதி அறிமுக உரையினை விரிவுரையாளர் இராஜேந்திரம் விமல் ஆற்றினார்.
அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்
அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.








