என். சௌவியதாசன்
மட்டக்களப்பு தாளங்குடா ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவன் றிசோன் றோபட் பெட்டி வடிவ 100 கூட்டல் 100 கழித்தல் கணக்குகளுக்கு 2 நிமிடம் 10 நொடிகளில் தீர்வெழுதி சோழன் உலகசாதனையை அண்;மையில் அடைந்துள்ளார்.
இவர் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ. தனுராஜ் ஆகியோர் முன்னிலையில் இச் சாதனையை படைத்துள்ளார்.
3ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவனான இவர் மட்டக்களப்பு தாளங்குடாவைச் சேர்ந்த ரோபட் ஞானமலர் ஆகியோரின் புத்திரராவார்.இவரை பாராட்டி கௌரவித்து விருதுகளும், சான்றிதழ்களும்,பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் மட்டக்களாப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அருட்தந்தை நவாஜி நவரெட்ணம்,அருட்ந்தை மார்சல் மற்றும் அருட்தந்தைகள் அன்பு,சுகந்தன்,அருட்சகோதரி தவசீலா மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.








