SPORTS COLOURS AWARDS பெற்றுக்கொண்ட கல்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள்.

கிழக்கு மாகாண விளையாட்டு வர்ண விருது வழங்கும் விழா 2024/2025 கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் 23.12.2025 அன்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கடமைபுரியும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் . சௌ.பாலுராஜ் அவர்களும். மற்றும் உவெஸ்லி பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் . சௌ.சோபன்ராஜ் அவர்களும் இந’நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு நிகழ்வானது தலைவர் A.S.M.Azeem தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 48வது மற்றும் 49வது தேசிய விளையாட்டு விழாக்களில் பதக்கங்கள் பெற்ற வீரர்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்முனை JKMO கழக (power Star) வீரர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய விளையாட்டு விழா சாதனைகள்
48வது தேசிய விளையாட்டு விழா – 2024
KARATE (Men) – 🥈 வெள்ளிப் பதக்கம்
S. பாலுராஜ்

49வது தேசிய விளையாட்டு விழா – 2025
KARATE (Men) – 🥇 தங்கப் பதக்கம்
S. பாலுராஜ்

MOST OUTSTANDING PLAYER எனும் விருது S.BALURAJ அவர்களுக்கு வழங்கபட்ட்து.

S. சோபன்ராஜ் அவர்களுக்கு Best karate – Kata Coach எனும் விருதும் வழங்கப்ட்டது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விருது வழங்கும் விழாவில் விருதுகளைப் பெற்ற கல்முனை JKMO கழகத்தினை சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இவர்களுக்கு பயிற்றுவித்த
இவர்களின் பிரதம போதனாசிரியர் shihan.Eng. S.முருகேந்திரன் அவர்களுக்கும் கல்முனை வடக்கு கல்முனை நெட் மீடியா சார்பாக
மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விளையாட்டில் கிழக்கு மாகாணத்தின் பெருமையை உயர்த்தும் உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்.