துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக நேற்று (14.10.2025) வழங்கியுள்ளார்.

வீ. ஜெகதீசன் இதற்கு முன்பு அதே அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று (14) தமது புதிய பதவியில் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அரச நிர்வாகச சேவையில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ள வீ. ஜெகதீசன், முன்னதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.