மட்/ துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்.

என்.சௌவியதாசன்.

பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/ துறைநீலாவணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக (15) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஆறுமுகம் மதியழகன் தலைமையில். நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலைய கல்வி பணிப்பாளர் எஸ் . ஸ்ரீதரன் பிரதம அதிதியாவும் விசேட அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர்களானபி. திவிதரன், ஆர். ஜீவானந்த ராஜா, எஸ். சுரேஷ், கே. திருச்செல்வம், போன்ற மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், வலைய மட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்களும், நிகழ்விலே பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இப்பாடசாலையை புதிதாக அதிபராக பொறுப்பேற்று குறுகிய காலம் என்றாலும் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வரும் ஆறுமுகம் மதியழகன், மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோரை பாடசாலை சமூகத்தினரும், கிராம மக்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.