மட்டக்களப்பு -களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவிக்ணேஷ்வரர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -2025.
( RJ மேனன்)
கலியுக கணபதியாய் களுமுந்தன்வெளி பதிதனில் கருணை நிறை முகம் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ மாணிக்கவிக்னேஷ்வரர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக குடமுளுக்கு பெருஞ்சாந்தி விஞ்ஞானபனம் நாளை 30 / 08/ 2025 சனிக்கிழமை கர்மாரம்ப நிகழ்வுகளோடு ஆரம்பமாகி 02/09/2025 செவ்வாய்க்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வும் 03/09/2025 புதன்கிழமை காலை 9 மணி 5 நிமிடம் முதல் 10.00 மணி வரையுள்ள துலா லக்கின சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகளும் 12 ஆம் நாள் எதிர் வரும் 14/09/2025 ஞாயிற்றுக்கிழமை சங்காபிஷேகமும் இடம்பெற்று புனித கும்பாபிஷேக நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு காணவிருக்கின்றது.
எனவே இந்த புனிதமான நாட்களில் விநாயகப் பெருமான் மற்றும் முத்துமாரியம்மன் மெய்யடியார்கள் அனைவரும் ஆச்சார சீலர்களாய் ஆலயம் வருகை தந்து மஹா கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டு இறை சக்தியருளினை பெற்றுய்யுமாறு அனைவரையும் இறையன்போடு அழைக்கின்றார்கள் களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கவிக்னேஷ்வரர் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையினரும்,
விநாயகர் இந்து இளைஞர் மன்றத்தினரும்.
அனைவரும் வருக இறையருள் பெறுக!
