கனடாவில் கலக்கிய காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் !
( வி.ரி.சகாதேவராஜா)
கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம்
ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.
உற்சவ கால மகோற்சவ குருவாக இலங்கை கிழக்கு காரைதீவில் இருந்து பிரபல சிவாச்சாரியார் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் அங்கு சென்று சிறப்பாக செயற்பட்டார்.அவரது மந்திர உச்சாடனம் மற்றும் கிரியை முறைமை பலரையும் கவர்ந்தன.
கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய சதுர்த்தி மகோற்சவம் 25 ஆம் தேதி சப்பரம் 26 ஆம் தேதி தேர் ஊர்வலம் 27 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.
டொரன்டோ நகரில் இடம்பெற்ற தேர் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.அங்கு போலீசார் அதற்கான பாதுகாப்பு வழங்கினர். அங்குள்ள பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.









