பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

மட்டக்களப்பு கரடியானாறு ஸ்ரீ நரசிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன திருவிழா 2025 -09 -01 திகதி ஆரம்பமாகவுள்ளது . ஏற்பாடுகளை ஆலய நிருவாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பாபிஷேக நிகழ்வுகள் ஆரம்பமாகும் தினத்தன்று(01) மாலை வேளையில் கல்முனை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட நான்கு அடி உயரமான சிவலிங்கம் ஒன்றும் அவ் ஆலயத்திலே அமைந்துள்ள மலையின் மீது பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

ஆலய பரிபாலன சபையினரின் கோரிக்கைக்கு அமைவாக வல்லவர் தவத்திரு புண்ணிய மலர் அம்மா அவர்களின்னால் சிவலிங்கம் வழங்கப்பட்டது. வல்லவர் தவதிரு புண்ணிய மலர் அம்மா அவர்களால் இதுவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் 30க்கு மேற்பட்ட சிவலிங்கங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதும்,குறிப்பிடத்தக்கது.

கரடியனாற்றிலே பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிவலிங்கத்துக்கான பீடம் அமைப்பதற்கான நிதி உதவியினை கரடியனாற்றை சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு சு. காங்கேயன் என்பவர் வழங்கியிருந்தார். கரடியனாறு ஸ்ரீ நரசிங்க சுவாமி ஆலயத்திலே
01 – 09 – 2025 கர்மாரம்பம்.
02 – 09 – 2025 எண்ணெய்காப்பு (காலை 06 மணி தொடக்கம் மாலை 04 வரை)
03 – 09 – 2025 மஹா கும்பாபிசேக நிகழ்வுகளும் தொடர்ந்து 12ம் திகதி வரை மண்டலாபிசேக பூசைகளும் இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.