இலங்கை வந்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!

''

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவு செயலாளர்!இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ​​இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார். அதேபோல் மேலும் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலம் மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கின்றது. – சவளக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மீரா முகையதீன் அஷ்ரப்

''

பாறுக் ஷிஹான்சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம்   சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு சுகாதார வழிமுறைக்கமைவாக சொறிக்கல்முனை 6ஆம் கொளனி மிலேனியம் பாலர் பாடசாலை வளாகத்தில் நேற்று(1)  இடம்பெற்றது. இந்நிகழ்வானது  சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப் தலைமையில் […]

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதைத் தொடர்ந்து, கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள்

''

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நேற்று (01) அதிகாலை 4.00 மணி முதல் நீக்கப்படுவதைத் தொடர்ந்து, கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகள், ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மிக இறுக்கமாக ஒழுங்கமைக்கப்பட் டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டல்கள் வருமாறு: வீடுகளிலிருந்து வெளியேறுதல் – தொழிலுக்காக, சுகாதார தேவை, அத்தியாவசிய கொள்வனவுக்கு மாத்திரம்மதவழிபாட்டுத் […]

அமைச்சர் டக்ளசிடம் கிழக்கு மாகாண மீனவர் சங்கங்கள் கோரிக்கைநேரில் சந்தித்து பேச விருப்பம்

''

(சம்பூர் நிருபர் – பா.பிரியங்கன்) கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாகாணத்துக்கு நேரில் வருகை தந்து மீனவ உறவுகளின் பிரச்சினைகளை செவிமடுக்க வேண்டும் என்று இம்மாகாணத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் கோரி உள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது, அவர் நேரில் வந்து பிரச்சினைகளை செவிமடுத்தால் நிச்சயம் உரிய தீர்வுகளை பெற்று தருவார், அவருடைய வருகைக்காக வழி மேல் விழி […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பூஜித், ஹேமசிறிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

''

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்று (01) கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் எடுத்தக்கொள்ளப்பட்ட போது, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் ஐஜிபி பூஜித் ஜெயசுந்தர மீது சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். […]

அனைத்துத் ‘தடுப்பூசி’ எதிர்ப்பு வீடியோக்களுக்கும் youtube தடை

''

யூடியுப் நிறுவனம் தடுப்பூசிகளுக்கு எதிரான அனைத்து வீடியோக்களையும் தடை செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. தட்டம்மை, சின்னம்மை ஆகியவற்றுக்குப் போடப்படும் தடுப்பூசிகளுக்கு எதிரான வீடியோக்களும் அகற்றப்படவுள்ளன. தடுப்பூசிகளுக்கு எதிரான பிரபல ஆர்வலர்களையும் யூடியுப் நிறுவனம் தடை செய்யும் என்று அந்த சமூகதளம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் பற்றி வெளியிடப்பட்ட பொய்த் தகவல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், அது குறித்து முன்கூட்டியே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று யூடியுப் குறிப்பிட்டது. யூடியுபில் வெளியிடப்படும் […]

இந்திய வெளியுறவு செயலர் ஷ்ரிங்லா இன்று வருகிறார்

''

இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ச வர்தன் ஷ்ரிங்லா இன்று இலங்கைக்கு அவசர விஜயம் மேற்கொண்டு வருகின்றார். இந்திய – இலங்கை உறவுகளுக்கு இடையிலான நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்விஜயம் இடம்பெறுகின்றது. நியூயோர்க்கில் 10 நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளின் வெளிவிகார அமைச்சர்களுக்கும் இடையில்  இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாகவே இவ்விஜயம் பார்க்கப்படுகின்றது. அடுத்த வாரங்களில் இலங்கையில் முழுமையான அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட […]

கல்முனை வடக்கு பற்றி பேச வியாழேந்திரனுக்கு அருகதை இல்லை!

''

கல்முனை வடக்கு பற்றி பேசவியாழேந்திரனுக்குஅருகதை இல்லை அரச அதிகாரத்தை வைத்து தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றவே முற்படுகிறார் * தமிழர்கள் தொடர்பில்  முடிவெடுக்கும் அதிகாரம்  ஹரிஸுக்கு கிடையாது – கலையரசன் எம். பி காட்டம் ஹரிஸ் எம். பி உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்ற பட்சத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு இரவுக்குள் தரம் உயர்த்தி தர முடியும் என்றுஇராஜாங்க அமைச்சர் […]