பெரியநீலாவணை  கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இந்த வருடம் (2017) புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற ஜெகன் ஷேஸ்மிதனை (புள்ளி 167) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (14.11.2017) பெரியநீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு சென்று கேடயம் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலய பொருளாளரும், தமிழரசுக் கட்சியின் கல்முனை தொகுதிக்கான உப தலைவருமான க.கனகராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தார்.