தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி மூலம் உறுதிசெய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளபோதும், அதுதொடர்பில் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை எனவும் சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.