சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தை(21-06-2024) முன்னிட்டு அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக இளம் யுவதிகளுக்கு யோகா பயிற்சி இடம் பெற்றது. யோகாசனக் கலாநிதி கலாபூஷணம் கா.சந்திரலிங்கம் அவர்களால் குருக்கள்மடம் முதியோர் இல்ல கேட்போர் கூட மண்டபத்தில் யோகா பயிற்சி வகுப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.