தமிழர்களுக்கு  ஒரே ஒரு பலம் வாக்குபலம்; என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும்– இரா. துரைரெட்ணம் —

(கனகராசா சரவணன்) 

கடந்த காலத்தில் தமிழர்கள்; 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினரையும் வைத்திருந்தது வரலாறு ஆனால் இவைகள் இருந்தே இலங்கை அரசாங்கமும்; சர்வதேசமும் எங்களை ஏமாற்றயது நாங்கள் நலினமடையப்பட்டு அனைத்தையும் இழந்துள்ளோம். எனவே எமக்கு உள்ள ஒரே ஒரு பலம் வாக்குபலம் அதற்கு ஒற்றமையே எமது பலம் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும் என என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஈர்.எல்.எப். சிரேஷ;ட தலைவருமான இரா. துரைரெட்ணம்  கோரிக்கை விடுத்துள்ளார்.  

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு  அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் ஏற்பட்ட இறுதி யுத்தத்தில் மனித அவலங்கள் மனித உரிமை மீறல் படுகொலை செய்த சம்பவங்கள் தொடர்பான மிகவும் நிண்டகாலமாக பல முயற்சிகளை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கட்சிகள் தனிநபர்கள் பொது அமைப்புக்கள் பாதிக்கப்பட்டோர் பல நடவடிக்கையை எடுத்து அந்த நடவடிக்கையின் பிகாரமாக முள்ளிவாய்காலுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை செயலாளர் நாயம் வந்து அஞ்சலி செலுத்தியமை சர்வதேசத்தின் பால் ஈர்;ந்தவர்களுக்கு வெற்றியாகும் இதற்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் நடந்து கொண்ட முறை என்பது ஏற்புடையதல்ல எந்த மனித நாகரிகத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அவர்களுடைய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது  அப்படிப்பட்ட துயரமான சம்பங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக வடக்கு கிழக்கில் பல கருத்துக்கள் உலாவிவருகின்றது மீண்டும் மீண்டும் அழுத்தமாக கூறிக்கொள்கின்றோம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் தமிழர்களுக்காக இருந்தது ஒரு தனிமனித சுதந்திரமானது வாக்களிக்கும் உரிமையாகும்.  ஒரு தனிமனிதன் தனது உரிமையான வாக்கினையளித்து  ஒருவனை வெற்றி பெறவைப்பதற்கும் தோல்வியடைய வைப்பதற்கும் அவன் சிறப்புரிமையை எவராலும் மறுக்க முடியாது.

இதனடிப்படையில் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வடகிழக்கு மக்கள் பல சந்தர்பங்களில்  பகிஸ்கரித்தும்; வாக்களித்தும் உள்ளனர் இந்த விடையத்தில் ஒரு சில ஜனாதிபதிகளுக்கு மிக கூடுதலான ஆதரவு தெரிவித்த வரலாறு உண்டு ஆனால் எமது இனப்பிரச்சனை தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகள் வாக்குகளை பெற்றுவிட்டு தமிழர்களை ஏமாற்றியதே வரலாறு ஆகும.;

இந்த வரலாற்றை நாங்கள் மறந்துவிடவில்லை அதற்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட வலிகளை சுமந்தவர்களாக இருக்கின்றோம். இதற்கு எமக்கு உள்ள ஒரே ஒரு பலம் வாக்குபலம். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஏமாற்றப்பட்ட நாங்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் சமூகம் சாந்த அமைப்புக்கள் உட்பட அனைத்து சக்திகளும் ஒன்று சேர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வலுவான முடிவை எடுப்பதற்காக பொது வேட்பாளர் நிறுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

சில கட்சிகள் முடிவுளை அறிவித்துள்ளது சில கட்சிகள் அறிவிக்கவில்லை இருந்தாலும் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்ந்து ஜனாதிபதி தொடர்பான ஒருமித்த முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த முடிவு தமிழர்களை எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து வைப்பதற்கான அடிகோளாக அமையவேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு அதனை நிலைநாட்ட வைப்பதற்கு நாங்கள் எதிர்காலத்தில் சரியான முடிவகளை எடுக்கவேண்டும் அற்கு தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும்.

கடந்த காலத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசின் முப்படைக்கு சமனாக முப்படையினரையும் வைத்திருந்த வரலாறு உண்டு ஆனால் இவைகள் இருந்தே இலங்கை அரசாங்கம் சர்வதேசம் எங்களை ஏமாற்றியது நாங்கள் நலினமடையப்பட்டோம் இன்று இவைகள் அனைத்தும் இழந்து இடம் தெரியாது தடம தெரியாது சடலங்கள் புதைக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தாய் தந்தையை இழந்து பரிதவிக்கின்ற நிலையில் அனைத்தையும் இழந்து நிலையில் எமக்கு இருக்கின்ற ஒரே ஒரு பலம் ஒற்றுமை என்பதை வடக்கு கிழக்கு தமிழ் தரப்புக்கள் மறந்துவிடக் கூடாது

அதுமட்டுமல்ல கிழக்கு மாகாண மக்கள் பலவீனமடைந்திருக்கின்றோம்; ஒற்றமையே எமது பலம் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒற்றமையாக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்  என்றார்