காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் இருந்து இவ்வருடம் 4 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் காணிப்பதிவாளராக கடமையாற்றிய திருமதி. மேகலா சிவகனேஷன் மற்றும் மேலதிக காணி பதிவாளராக கடமையாற்றிய கி. சிவதர்சன் ஆகிய அதிகாரிகள் உட்பட மேலும் இரண்டு உத்தியோகத்தர்கள் உள்ளடகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இவர்களுக்கான பதில் உத்தியோகத்தர்கள் இதுவரை நியமிக்கப் படாமையால் அலுவலக அன்றாட செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக சேவையை நாடி செல்லும் பிரசித்த நொத்தாரிஸ், சட்டத்தரணிகளை மற்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றமை அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அரசியல் அழுத்தமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.