“கலாட்டா பேரின்ப சுற்றுலா” திரைப்படம் மட்டக்களப்பு விஜயாவில் இன்று ஐந்து காட்சிகள்!

பேராசிரியர். பாரதி கெனனடி அவர்களின் முயற்சியில் ம,ட்டக்களப்பு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நகைச்சுவை திரில்லர் திரைப்படமான “கலாட்டா பேரின்ப சுற்றுலா” (GPS) இன்று (30) விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

இத்திரைப்படமானது அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான முக்கிய செய்தியைக் கொண்டு வருகிறது.

மீன் மகள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆனா கலையகம் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை கிரேசன் பிரசாந்த் இயக்கியுள்ளார்.

ஏ.ஜே.ஷங்கர்ஜன் திரைப்படத்தின் பாடல்களை இசையமைத்துள்ளதுடன் பாடல் வரிகளை ஆல்ட்ரின் கீட்ஸ் கென்னடி மற்றும் சனாஷ் அலோசியஸ் மனோராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இன்று (30) விஜயா திரையரங்கில் ஐந்து காட்சிகள் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது காட்சி காலை 10.30 மணிக்கும், இரண்டாவது காட்சி மதியம் 02.30 மணிக்கும், மூன்றாவது காட்சி மாலை 04.30 மணிக்கும், நான்காவது காட்சி மாலை 06.30 மணிக்கும், ஐந்தாவது காட்சி இரவு 08.30 மணிக்கும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.