மாவீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து துயிலும் இல்லங்களும் கண்ணீரில் நிறைந்துள்ளது.

பல கனவுகளுடன் பெற்ற பிள்ளைகளை கல்லறை வடிவில் பார்த்து பெற்றோர் புலம்புகின்றனர்.

அண்ணன்,தம்பி,மாமா, என அவர்களின் அனைத்து உறவுகளும் கலங்கி நிற்கின்றனர்.

உலகத் தமிழர்களால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

மனதாலும் உடலாலும் போரினால் பல இழப்புக்களை உணர்ந்த உள்ளங்கள் தமது வலிகளை சொல்வதற்கு வார்த்தையின்றி கண்ணீரில் கரைந்து நிற்கும் காட்சிகள் தாண்டியடி துயிலும் இல்லத்தில் நிறைந்துள்ளன.