2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (க.பொ.த. உயர்தர) பரீட்சைகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ கால அட்டவணை, விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேவையான தயார்ப்படுத்தல்களை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.