விசு கணபதி பிள்ளை அவர்களின் உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் இவ்வருடத்துக்கான முதலாவது மாணவி ஒருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

திரு/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர கலை பிரிவில் கல்வி கற்கும் மாணவியே இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் சஸ்மிதா தனது உயர் கல்வியை தொடர்வதற்கான நெருக்கடி தொடர்பாக உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் ஊடாக அதன் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து பணிப்பாளர் உடனடி கல்வி நடவடிக்கைக்கான மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானித்தார்.அதற்கமைய நேற்றைய தினம்(23) நான்கு மாதங்களுக்கான கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட்டது.

உதவும் பொற்க்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் மதிசீலன் அவர்கள் மற்றும் கல்முனைநெற் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் திரு பி. கேதீஸ் அவர்களும் கலந்து கொண்டு மாணவிக்கான உதவித் தொகையை வழங்கி வைத்தனர்.

அமரர் முருகமூர்த்தி ஜீவரத்தினம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அன்னாரது குடும்ப உறுப்பினர்களால் இவருக்கான நிதி உதவி தொகை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.