இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட ஆறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேசசெயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலமையில் இடம்பெற்றது.

(07) இந்நிகழ்வின் ஒருங்கினைப்பினை நாவிதன்வெளி இந்துகலாசார உத்தியோகத்தர்களான திருக.நீலேந்திரன், திருமதிசறோசினி பாலசுந்தரம் மேற்கொண்டதுடன் நிகழ்வு தொடர்பான விளக்கவுரையினை மாவட்டசெயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி நிகழ்த்தினார். மற்றும் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு செ. சிவம், நிர்வாக கிரிம உத்தியோகத்தர் திரு மனோஜ்இந்ரஜித், ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சுபாஸ்கர் சர்மா, திணைக்கள தலைவர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரிவு தலைவர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.