சீடா அமைப்பால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கல்வியைத் தொடரும் தேவை உடைய மாணவர்களுக்காக,
கற்றல் உபகரணங்கள் (அப்பியாசக் கொப்பிகள்) வழங்கும் நிகழ்வு
முதற்கட்டமாக நேற்று முன்தினம் (05.01.2026) இராமகிருஷ்ண வித்யாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஆறு பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

களுதாவளை மகா வித்தியாலய மாணவர்களுக்கும், எவலயத்துக்கு உட்பட்ட வெல்லாவெளி கோட்ட மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று 07.01.2026 களுதாவளை மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நற்கருமத்திற்கு நிதி பங்களிப்பு செய்த அனைத்து சீடா உறவுகளுக்கும்
அதேபோல், இந்த நிகழ்வை சிறப்பாக திட்டமிட்டு நடத்தி முடித்த
கள நிர்வாகத்தினர்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.