வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் பிரதிஷ்டை!


சிவசிந்தனைகூடம் எனும் தொனிப்பொருளில் மாணவர்களிடையே ஞானம் யோகாசனம் போன்ற கலைகளை ஊக்கப்படுத்தி நல்வழியில் பயணிக்கச்செய்யும் சிறந்த நோக்கோடு வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தியான லிங்கம் தியான மண்டபத்துடன் சேர்த்து பிரதிஷ்ட்டை செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு பாடசாலை அதிபர் தர்சனாத் சமூக செயற்பாட்டாளர் காத்தவராஜன் மற்றும் ஆசிரியர் பொது மக்களின் பங்களிப்போடு நடைபெற்றது.

மாணவர்கள் தினமும் காலையில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து 10 அல்லது 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபடும் நடைமுறையை உருவாக்கி உள்ளதாக இத்திட்டத்தை ஏற்படுத்த மூல காரணமாகும் எனவும் கல்வியோடு நல்லொழுக்கத்தையும் சேர்த்து ஊட்டி நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டியது எமது அவசியமாகும்.

பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் ஈழத்து கர்ணன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகன் அவர்கள் இதற்கான நிதிப்பங்களிப்பை செய்திருந்தார். இவ்வாறான நல்ல திட்டத்தை தேவைப்படும் பாடசாலைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் இது நாகராசா சனாதனன் புண்ணியமலர் அம்மா அவர்களின் 26 ஆவது சிவலிங்கமாகவும் முதலாவது
தியானலிங்க பிரதிஷ்டையாகவும் அமைந்திருந்தது எனவும் இதற்கு பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் ஈழத்து கர்ணன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகன் அவர்கள் இதற்கான நிதிப்பங்களிப்பை செய்திருந்தார் எனவும் இத்திட்டத்தை முன்னெடுக்க மூல காரணமான நாகராசா சனாதனன் ( தமிழகரன் சனா) தெரிவித்தார்.

நாகராரா சனாதனன் (தமிழகரன் சனா) தெரிவித்தார். தியான லிங்க பிரதிஷ்டை கிரியையினை சிவஸ்ரீ சுபாஸ்கர சர்மா நிகழ்த்தினார் இதன்போது இசைத்துறை விரிவுரையாளர் நரேந்திரா மற்றும் மிருதங்க இசைக்கலைஞர் லோவிதரன் ஆகியோர் திருமுறை பாராயணங்களை இசைத்திருந்தார்கள் இத்துடன் வளத்தாப்பிட்டி சாய் நிலையத்தினரால் ஸ்ரீ ருத்ரமும் இசைக்கப்பட்டது.

நாகராசா சனாதனன் புண்ணியமலர் அம்மா அவர்களின் 26 ஆவது சிவலிங்கமாகவும் முதலாவது தியான லிங்க பிரதிஷ்டையாகவும் அமைந்திருந்தது.
இந் நிகழ்வுக்கு சைவ பண்டிதர் வைசப் புலவர் யோ.கஜேந்திரா அவர்கள் உட்பட இப்பிரதேச பாடசாலை அதிபர்களும் பங்குபற்றியிருந்தனர்.