இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம்

( வி.ரி.சகாதேவராஜா)

இன்று யூலை 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக

வனக்காவலர் (World Rangers Day) தினமாகும்.

உலகம் முழுவதும் இன்று ( யூலை 31) கொண்டாடப்பட்ட வனக்காவலர் தினத்தை முன்னிட்டு, எமது காடுகள், வனவிலங்குகள், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை மரபுகளை பாதுகாக்க தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள வனவிலங்கு காவலர்கள் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தினர் தங்கள் மரியாதையை வாழ்த்துக்களை தெரிவித்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை, இலங்கையின் அரிய இயற்கை வளங்களையும் உயிரியல் பாரம்பரியத்தையும் இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வருகிறது.

Lions International அமைப்பின் சுற்றுச்சூழல் (Environment) உலகளாவிய சேவை நோக்கை முன்னெடுத்து,  கல்முனை நகர லயன்ஸ் கழகம் Lions Club of Kalmunai Town, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு முக்கிய முயற்சியாக, குமண தேசிய பூங்கா நுழைவாயில் (உகந்தை கோவில் அருகாமையில்) பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் பலகை  நிறுவப்பட்டது.

 இயற்கையை மதித்தல், வனவிலங்குகளை பாதுகாத்தல் மற்றும் பொறுப்புணர்வுடன் சுற்றுலா மேற்கொள்ளுதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உலக வனக் காவலர் தினத்தில், இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க தன்னலமின்றி சேவையாற்றும் அனைத்து வனக் காவலர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வனத்தை  பேணிப் பாதுகாப்போம்.ஏமது சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்போம்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பசுமையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

உலக வனக் காவலர் தின நல்வாழ்த்துகள் எனகல்முனை நகர லயன்ஸ் கழக உபதலைவர் எந்திரி லயன் எம்.சுதர்சன் தெரிவித்தார்.